சரியான நேரத்தில் நியாயத்திற்கு குரல் கொடுத்தார் நடிகர் விஜய் - கமல்ஹாசன் புகழாரம் 

Report Print Abisha in இந்தியா

பேனர் விவகாரம் தொடர்பாக சரியான நேரத்தில், நடிகர் விஜய் குரல் கொடுத்திருப்பதாக நடிகரும் மக்கள் நீதிமைய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், இந்தி திணிப்பு குறித்து, தாய்மொழி மீது கை வைத்தால் மன்னிக்கப்படாது என்றார். விபத்தின் மூலம் கிடைத்த மொழி ஆங்கிலமாக இருந்தாலும் அது நன்மையாக அமைந்தது என்று கூறிய அவர், அடிமையாக இருந்த போதிலும் ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்து கொண்டோம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பேனர் விவகாரம் குறித்து நடிகர் விஜய் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், விஜய் பேசியது சரியான நேரத்தில் நியாயத்திற்காக குரல் கொடுத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்