இருவரும் உல்லாசமாக இருப்போம்... என்னை விட 3 வயது அவள் அதிகம்! கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவனை பிரிந்து வேறொரு ஆணுடன் பழகி வந்த பெண் காணாமல் போன நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கடுக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கசாமி. இவருக்கும் திருச்சி, சமயபுரம் அருகிலுள்ள நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த சிவரத்தினம் என்ற பெண்ணுக்கும் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில் சிவரத்தினம் மற்றும் அவருடைய கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக, தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

சிவரத்தினம்

சிவரத்தினம் தன் மகனுடன் அவருடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்த நிலையில், வெள்ளகோவில் பகுதியிலுள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.

இதனால் திருப்பூரிலே தங்கியிருந்த சிவரத்தினம் அவ்வப்போது திருச்சி சமயபுரத்துக்கு வந்து தன் பெற்றோரையும், அங்கு பெற்றோருடன் இருக்கும், மகனையும் பார்த்து விட்டுச் செல்வார்.

கடந்த சிலவாரங்களாக சிவரத்தினம் மகனைப் பார்க்க வரவில்லை. இதனால், அவரது உறவினர்கள் அவர் பணியாற்றிய நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் தேடியுள்ளனர்.

ஆனால், அவர் எங்கு போனார்? என்ன ஆனார்? என்பது குறித்த எந்தத் தகவலும் தெரியாததால், கடந்த 16 -ஆம் திகதி திருச்சி சமயபுரம் காவல் நிலையத்தில் சிவரத்தினம் காணாமல் போனது பற்றி புகார் கொடுத்துள்ளனர்.

புகாரை வழக்காகப் பதிவு செய்த பொலிசார், விசாரணையை துவங்கினர். காணாமல் போன சிவரத்தினம் குறித்த தகவல்கள் ஏதும் தெரியாத நிலையில், அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.

அந்த வகையில் சிவரத்தினம் செல்போன் எண்ணுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தொடர்ந்து பலமுறை பேசியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து சென்று, ஏழுமலையைப் பிடித்து விசாரித்தபோது. சிவரத்தினத்தை கொலை செய்துவிட்டேன் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், சிவாவும் நானும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால், இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

ஏழுமலை

அப்போது சிவா, அவரின் கணவருக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்னைகளை சொல்லி அழுவார், அந்தவகையில் அவருக்கு ஆறுதல் சொல்வேன்.

நாளடைவில் எங்களின் இந்த நட்பு காதலாக மாறியது. என்னைவிட மூன்று வயது அதிகம், அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி பையன் இருப்பதால், சிவா காதலை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்.

அதன் பின் அவர் தனிமையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார். இதனால் நாங்கள் அவ்வப்போது திருப்பூரிலிருந்து திருவண்ணாமலை வருவோம்.

எங்கள் வீட்டில் தங்கி உல்லாசமாக இருப்போம். அவ்வப்போது அவளிடம் செலவுக்குப் பணம் வாங்குவேன்.

அந்தவகையில் கடைசியாக எங்க ஊருக்கு அவளை அழைத்து வந்திருந்தபோது, செலவுக்குப் பணம் கேட்டேன். பணம் இல்லை என்று சொன்னால், அதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. கோபத்தில் அவளை அடித்தேன். மயங்கி கீழே விழுந்த சிவாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.

கொலை செய்துவிட்டோம், உடலை எப்படியாவது மறைத்து விட வேண்டும் என்பதற்காக, ரயில் தண்டவாளத்தில் வீசி விட முடிவு செய்தேன்.

அதன் படி, சிவாவின் உடலை யாருக்கும் தெரியாமல் தண்டராம்பட்டு அருகிலுள்ள பச்ச குப்பம் பகுதி ரயில்வே தண்டவாளத்தில் வீசிவிட்டு வந்தேன்.

ரயில் மோதிச் சிதைந்த உடலைக் கைப்பற்றி வேலூரை அடுத்த ஆம்பூர் காவல் நிலைய பொலிசார் விசாரித்து வந்தார்கள்.

சிவரத்தினத்தின் ஊர் திருச்சி என்பதாலும், திருப்பூரில் வேலை செய்ததாலும் நமக்கு இனி பிரச்னை இருக்காது என்று நம்பினேன், ஆனால், சிவரத்தினத்தின் பெற்றோர் புகாரால் மாட்டிக் கொண்டேன் என்று கூறியுள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...