வேலைக்கு சேர்ந்த மறுதினமே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..!

Report Print Vijay Amburore in இந்தியா

சென்னையில் வேலைக்கு சேர்ந்த மறுதினமே 8வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் டானிடா ஜூலியஸ் என்கிற 24 வயது இளம்பெண் நேற்றைக்கு முன்தினம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

நேற்றைய தினம் வேலைக்கு சென்ற அவர் காலை 10 மணி முதல் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 6.45 மணியளவில் 8வது மாடிக்கு வேகமாக சென்ற டானிடா திடீரென அவசர கால வெளியேறும் வழியின் மூலம் வெளியில் குதித்துள்ளார்.

முதல் மாடியில் இருந்த இரும்புக்கம்பியில் அவருடைய தலை மோதி இரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், டானிடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கொலையா? அல்லது தற்கொலையா? என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்