குழந்தைக்கு தாயானார் திருநங்கை..இந்தியாவில் வரலாற்றில் முதன்முறை

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் மிக முக்கியமான திருநங்கைகள் உரிமை ஆர்வலர்களில் ஒருவரான திருநங்கை அக்கை பத்மசாலி குழந்தைக்கு தாயாகியுள்ளார்.

திருநங்கை சமூகத்திற்கான அதிகாரமளிப்பதற்கான மற்றொரு எடுத்துக்காட்டாக திகழ்ந்துள்ளார் அக்கை. குழந்தை ஒன்றை அதிகாரப்பூர்வமாக தத்தெடுத்த நாட்டின் முதல் திருநங்கையில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடி வருபவர் திருநங்கை அக்கை பத்மசாலி. இவருக்கும் வாசுதேவ் என்ற சமூக செயற்பாட்டாளருக்கும் கடந்த ஜனவரி 20ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் திருநங்கை ஒருவரின் திருமணம் பதிவு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

திருமணமான அக்கை மற்றும் அவரது கணவர் வாசுதேவ், இப்போது ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர்.

Google

இதுகுறித்து அக்கை கூறியதாவது, நாங்கள் குழந்தைக்கு அவின் என்று பெயரிட்டுள்ளோம், நான் எப்போதும் ஒரு தாயாக மாற விரும்பினேன்,இது என் கனவு மற்றும் விருப்பம்.

எங்கள் குடும்பங்கள் குழந்தையை ஏற்றுக்கொண்டன. குழந்தை என் அம்மாவின் மடியில் விளையாடுவதைப் பார்ப்பது என் மனதைக் கவர்ந்தது. அவின் வளரும்போது எந்தவிதமான பாகுபாட்டையும் சமூக களங்கத்தையும் எதிர்கொள்ள மாட்டார் என்று நம்புவதாக அக்கை கூறினார்.

இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை அக்கை பத்மசாலி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்