இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்த மகன்! அதை வீடியோ எடுத்த தாய்...கொடூரர்களின் புகைப்படம் வெளியீடு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இளம்பெண்ணை மகன் துஷ்பிரயோகம் செய்வதை தாய் மறைந்திருந்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஷ்கர் மாநிலத்தின் ராய்ப்பூரை சேர்ந்த இளைஞரும், 19 வயதான இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஒருநாள் அந்த பெண்ணை இளைஞர் தனது வீட்டுக்கு அழைக்கவும் அவர் நம்பி சென்றார்.

இளைஞர் வீட்டில் அவர் தாயும் இருந்த நிலையில் அந்த பெண்ணை கட்டிபிடித்து வரவேற்று இனிப்பு கொடுத்தார்.

அதில் மயக்க மருந்து கலந்திருப்பதை அறியாமல் அப்பெண் சாப்பிட்ட நிலையில் மயங்கினார். அந்த பெண்ணை இளைஞர் துஷ்பிரயோகம் செய்ய அதை அம்மா வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி தாயும், மகனும் பணம் கேட்டு மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இந்த விடயம் வெளியில் தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என கருதி வீட்டுக்கு வந்து அப்பாவின் பணம் ரூ 4 லட்சத்தை கொண்டு போய் அங்கு கொடுத்தார்.

வீட்டில் வைத்திருந்த பணம் எங்கே என்று மகளிடம் தந்தை கேட்கவும் தான் நடந்த சம்பவத்தை கதறி கொண்டே சொல்லி இருக்கிறார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக பொலிசில் புகார் கொடுக்க தாய், மகனை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்