காட்டுப்பகுதியில் உல்லாசம்.... காதலியை கொன்று ஆற்றில் புதைத்த காதலன்: வெளியான பகீர் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தமிழகத்தில் மாயமானதாக கூறி தேடப்பட்டு வந்த பெண் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்ட நிலையில் ஆற்றுப்படுகையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் 48 வயதான பஞ்சவர்ணம். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில்,

தமது மகன் மற்றும் மூன்று மகள்களுக்கு திருமணம் செய்து வைத்த இவர் தற்போது தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தனது நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் வாங்கி வருவதாக இவர் கடந்த 4-ஆம் திகதி புதன்கிழமையன்று வீட்டை விட்டு வெளியில் சென்றவர் திரும்பவில்லை.

இதனையடுத்து இவரது மகன் பால்வண்ணச்சாமி தனது தாயை காணவில்லை என ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து வந்த பொலிசார், பஞ்சவர்ணத்தின் மொபைலில் அடிக்கடி பேசி வந்த காளிமுத்து என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்துள்ளனர்.

காளிமுத்துவிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது நண்பர்கள் குமார் மற்றும் லனின்பாய் ஆகிய இருவருடன் சேர்ந்து பஞ்சவர்ணத்தை கொலை செய்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடகீழ்குடி ஆற்றுப்படுகையில் புதைத்தது ஒப்புக்கொண்டுள்ளான். கொலையாளி காளிமுத்து அடையாளம் காட்ட புதைத்து மறைக்கப்பட்டு சிதிலமடைந்த நிலையிலுள்ள பஞ்சவர்ணத்தின் சடலத்தையும், லட்ச ரூபாய் பணம் மற்றும் ஏழரைப் பவுன் நகையையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்,

தொடர்ந்து, காளிமுத்து பொலிசாரிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில்., " எனக்கும் பஞ்சவர்ணத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி கொடுக்கல் வாங்கலும் உண்டு.

தற்பொழுது கடுமையான கடனில் இருப்பதால் அவரிடமிருந்து நகைகளை கேட்டேன். முதலில் தருவதாக கூறியவர் அதற்கடுத்து இல்லை என மறுத்துவிட்டார்.

இதனால் தனது 25 பவுன் நகை ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளதாகவும் பஞ்சவர்ணத்திடம் இருக்கும் நகைகளைக் கொண்டு அடகு வைத்து பணத்தை கேட்டதாகவும்,

சம்பவத்தன்று நகை அடகு வைத்து பணத்துடனே பஞ்சவர்ணம் வந்தார் என தெரிவித்துள்ளார் காளிமுத்து.

பின்னர் இருவரும் காட்டுப்பகுதியில் உல்லாசமாக இருந்துவிட்டு வடகீழ்குடி ஆற்றுப்படுகை அருகே சென்றதாக கூறியுள்ளார்.

அங்கே தமது கூட்டாளிகள் காத்திருந்ததாக கூறியுள்ள காளிமுத்து, அவர்களை விட்டு பஞ்சவர்ணத்தை மிரட்டியுள்ளார்.

ஆனால் அவர் கேட்பதாக இல்லை என தெரியவந்த நிலையில், வேறு வழியில்லாததால் மூவருமாக சேர்ந்து கொலை செய்தோம். ஆனால் தற்போது தன்னுடைய செல்போன் காட்டிக்கொடுத்துவிட்டது என பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்