நான் செய்ததை மறைக்க மாணவியை இரவில் வீட்டிலேயே தங்கவைத்து கொண்டேன்... ஆசிரியையின் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தன்னிடம் படித்த மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியை அதை மறைக்க அவரை தன் வீட்டிலேயே தங்கவைத்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு முதுகு, கை விரல்களில் படுகாயங்களுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் பொலிஸ் புகார் அளித்தார்.

பொலிசார் விசாரணையில் காயமடைந்த மாணவி பெத்தேல்புரத்தைச் சேர்ந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுத வந்த மாணவி திடீரென மயக்கமடைந்து விழுந்ததாகவும் விசாரித்ததில் மாணவி உடல் வலியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஆசிரியைகள் பரிசோதித்து பார்த்ததில் மாணவியின் முதுகில் பட்டை பட்டையாகவும், கையிலும் காயங்கள் இருந்ததை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அதிக மதிப்பெண் எடுக்க வலியுறுத்தி டியூசன் ஆசிரியை தாக்கியதாக கூறினார்.

இதையடுத்து ஆசிரியை ஹெசிமோளிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

அவர் அளித்த வாக்குமூலத்தில் மாணவி மதிப்பெண்கள் குறைவாக பெறுவதாகவும் அவரை படிக்க வைப்பதற்காக கரண்டி மற்றும் பிரம்பால் தாக்கியதாகவும் அதனால் ஏற்பட்ட படுகாயத்தை மறைக்க மாணவியை வீட்டுக்கு அனுப்பாமல் தனது வீட்டிலேயே தங்க வைத்து கொண்டதாகவும் கூறினார்.

மேலும் மாணவியின் பெற்றோரிடம் இரவு படிக்க வைத்து காலையில் தானே பள்ளிக்கு அனுப்பி வைப்பதாகவும் ஹெசிமோள் கூறியுள்ளது தெரியவந்தது.

படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஜெசிமோள் மீது பொலிசார் குழந்தைகள் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers