நடிகர் விஜய் கூறியது சரிதான்... ஆதரவு தெரிவித்த சீமான்

Report Print Vijay Amburore in இந்தியா

'பிகில்' இசைவெளியீட்டு விழாவில் அரசியல் குறித்து நடிகர் விஜய் பேசியது சரிதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

அட்லீ தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகவுள்ள 'பிகில்' படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ விவகாரத்தில் யாரை கைது செய்ய வேண்டுமோ அவரை விட்டுவிட்டு லொறி ஓட்டுனரை கைது செய்திருப்பதாக அரசின் மீது குற்றம் சுமத்தினார்.

மேலும், “யாரை எங்கே வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைக்க வேண்டும்" எனவும் கூறியிருந்தார். நடிகர் விஜய் கூறிய இந்த கருத்துக்கள் ஆளும் தரப்புகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் ஓடுவதற்காகவே இப்படி பேசுவதாக சில அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சரியான தலைவர்களை தேர்வு செய்ய மக்கள் தவறி விட்டனர். மக்களுக்கு அரசியல் குறித்த தெளிவான விழிப்புணர்வு தேவை என்பதற்காக தான் விஜய் அப்படி பேசியுள்ளார்.

சுபஸ்ரீ விவகாரத்தில் “குத்திக் கொலை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கத்தியை செய்து கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்" எனவும் சீமான் நடிகர் விஜய் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers