மனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்

Report Print Arbin Arbin in இந்தியா
893Shares

இந்தியாவின் கேரள மாநிலத்தில் படுக்கை அறையில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யில் பதிவான பெண்ணின் அந்தரங்க காட்சிகளை வெளிநாட்டில் இருக்கும் கணவர் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த திருமணமான இளைஞர் ஒருவர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

அந்த இளைஞரின் கணினியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சில படங்கள் மற்றும் காட்சிகள் பதிவாகி இருந்தன. அவற்றை அவர் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார்.

அதில் மனைவியின் அந்தரங்க காட்சிகள் மற்றும் மனைவி படுக்கை அறையில் உடை மாற்றும் காட்சிகளும் காணப்பட்டன.

மனைவியின் ஆபாச படங்களை பார்த்து அதிர்ந்து போன இளைஞர் இது தொடர்பாக மனைவியிடம் விசாரித்துள்ளார்.

அவர், தனக்கு எதுவும் தெரியாது என்றும், படுக்கை அறை காட்சிகளை யாரோ ரகசியமாக படம் எடுத்திருக்கலாம் என்றும் அப்பாவியாக பதிலளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த இளைஞர் வெளிநாட்டில் இருந்தபடியே கேரள சைபர் கிரைம் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

மட்டுமின்றி மனைவியின் ஆபாச படங்களை வலைத்தளத்தில் இருந்து அகற்ற வேண்டும், அதனை ரகசியமாக படம் பிடித்தவர்களை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்றும் புகாரில் கூறி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சைபர் பொலிசார் தீவிரமாக விசாரித்தனர். அந்த பெண்ணின் படங்கள் எங்கிருந்து பரப்பப்பட்டது என்பதை தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் ஆராய்ந்தனர்.

இதில், படங்கள் அனைத்தும் இளைஞரின் குடியிருப்பில் இருந்தே பரவி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து பொலிசார் குறித்த பெண்ணின் குடியிருப்புக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

அங்கு பெண்ணின் படுக்கை அறையில் ஸ்மார்ட் டி.வி. பொருத்தப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட் டி.வி.யில் இருந்து தினமும் கணவருடன் ஸ்கைப்பில் சேட் செய்வதாக அவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து ஸ்மார்ட் டி.வி.யை பரிசோதித்த வல்லுனர்கள் அதில் கமெரா ஓன்லைனில் இருந்தது தெரிந்தது.

அந்த பெண் இரவு நேரத்தில் கணவருடன் ஸ்கைப்பில் பேசிய பின்பு ஸ்மார்ட் டி.வி.யின் கமெராவை ஆப் செய்யவில்லை.

அது தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து உள்ளது. இதை அறியாமல் ஸ்மார்ட் டி.வி. முன்பே அந்த பெண் உடை மாற்றுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளார்.

இந்த காட்சிகள் ஸ்மார்ட் டி.வி. கமெராவில் பதிவாகி அப்படியே வெளிநாட்டில் இருக்கும் கணவரின் கணினியில் பதிவாகியுள்ளது. குறித்த காட்சிகளைதான் கணவர் பார்த்து விட்டு அலறி உள்ளார்.

சைபர் கிரைம் பொலிசார் மற்றும் கணினி நிபுணர்கள் இதனை கண்டு பிடித்து அந்த பெண்ணிடம் நடந்த தவறை எடுத்துக் கூறினர். மேலும் ஸ்மார்ட் டி.வி.யில் ஸ்கைப் பயன்படுத்திய பின்பு அதன் செயல்பாட்டை எப்படி நிறுத்த வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்