குழந்தைக்கு நான் தந்தையில்லை என கூறிய கணவன்... தலைமறைவான மனைவி... வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவள்ளூரை அடுத்த பட்டாபிராமை சேர்ந்தவர் ராஜ் (27). இவர் மனைவி கவுரி (25). தம்பதிக்கு 1½ வயதில் ஆகாஷ் என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான ராஜ் மதுபோதையில் தன் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

மேலும், அவர் கவுரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

அதாவது மகன் ஆகாஷ் தனக்கு பிறக்கவில்லை என்று கூறி குழந்தையை கொலை செய்யப்போவதாக கூறி கவுரியை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார்.

அப்போது, குடிபோதையில் தன் மனைவி கவுரியையும், மகன் ஆகாஷையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் நீண்ட நாட்களாக மனவேதனையில் இருந்து வந்த கவுரி, கடந்த 2016-ம் ஆண்டு வீட்டிற்கு மதுபோதையில் வந்த ராஜ் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார்.

பின்னர், வீட்டை பூட்டி விட்டு தன் மகனுடன் தலைமறைவாகிவிட்டார்.

2 நாட்கள் கழித்து அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததை தொடர்ந்து சந்தேகமடைந்த, அக்கம் பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த கவுரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருவள்ளுர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி கவுரிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்