ஏழு தமிழர்கள் விடுதலைக்காக மனு தர உள்ளதாக பதிவிட்ட நபர் கைது!

Report Print Kabilan in இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக, ஆளுநரிடம் மனு தர உள்ளதாக பேஸ்புக்கில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, 28 ஆண்டுகளாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் சிறையில் உள்ளனர்.

இவர்களை விடுவிப்பது குறித்து அரசியல் சாசனத்தின் 161வது பிரிவின் கீழ் தமிழக அரசே முடிவு செய்யலாம் என, கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேறியது. அத்துடன் தமிழக ஆளுநருக்கும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதன் பின்னர், தமிழர்கள் 7 பேர் விடுதலைக்காக ஆளுநரிடம் மனு தர உள்ளதாக காந்தி என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டார். இந்நிலையில், பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. குறித்த நபர் 7 தமிழர் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்