அவனுடனான தொடர்பை விட்டுவிடு நாம் ஒற்றுமையாக வாழலாம் என்ற கணவன்.. கேட்காத மனைவி... நடந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தவறான உறவை கைவிட மறுத்த மனைவியை கணவன் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தின் சாலை கிராமத்தை சேர்ந்தவர் வாணிமுத்து. இவர் மனைவி மகேஷ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் மகேஷ்வரிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு நபருடன் தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனை கண்டுபிடித்த வாணிமுத்து மனைவியை கண்டித்த நிலையில் இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், மகேஷ்வரியை அழைத்துப் பேசிய வாணிமுத்து, குறித்த நபருடனான தவறான உறவை கைவிட்டுவிடும்படியும் இருவரும் சேர்ந்து ஒற்றுமையாக வாழலாம் என்றும் கூறியுள்ளார். இதனை மகேஷ்வரி ஏற்காததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வாணிமுத்து, அரிவாளால் மகேஷ்வரியை சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் நேராக காவல் நிலையம் சென்ற வாணிமுத்து பொலிசில் சரணடைந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட அவரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்