இந்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கைகளில் இருந்து மாற்றம் வராத வரை யார் இலங்கையில் வென்றாலும் பயனில்லை என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தாய் மொழியில் இருந்து பலர் வெளியேறி விட்டதாக கருத்து தெரிவித்தார். இந்நிலையில் அவரது கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் சீமான், இந்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கைகளில் இருந்து மாற்றம் வராத வரை யார் இலங்கையில் வென்றாலும் பயனில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில், ‘பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது சரிதான். தாய் மொழியில் இருந்து பலர் வெளியேறி விட்டனர் என்ற கருத்தை ஏற்கிறேன். தமிழ் மொழியை வளர்க்க ஆள்பவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தனர்.? தமிழ்நாடு வேட்டைக்காடாக மாற்றப்பட்டுள்ளது.
பல நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சூயஸ் நிறுவனத்திற்கு இங்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது..? என் வளத்தை அழிக்க ஏன் வெளிநாட்டிற்கு அனுமதி வழங்க வேண்டும்..? மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அளவில் திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை.
கம்பி வழி தடத்தை ஏன் நெடுஞ்சாலைகளில் அமைக்கக் கூடாது..? மக்களை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மூலம் எத்தியோப்பியா, நைஜீரியா போல தமிழகம் மாறும். கட்-அவுட் வைப்பதன் காரணமாக இரு உயிர்கள் பலியாகியுள்ளது.
இதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். ஆளும் கட்சியினர் கட்-அவுட் போதையில் உள்ளனர். இரு கட்சிகள் இந்த கட்-அவுட் பிரச்னையில் முன்னோடியாக இருந்து வருகின்றனர். மேற்கொண்டு ரஜினி, கமல் இருவரையும் நண்பர் என்பதன் காரணமாக நடிகர் சிரஞ்சீவி அரசியலில் ஈடுபட வேண்டாம் என கூறி இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.