கடவுள் வீடியோ எடுக்க சொன்னார் எடுத்தேன்! வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த தமிழரின் பகீர் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் விண்வெளி விளக்க கண்காட்சி நடைபெற உள்ள கல்லூரியை வீடியோ எடுத்த சைக்கோ வாலிபர்கள் கடவுள் எடுக்கச் சொன்னதால் இப்படி செய்தோம் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரியில் விண்வெளி விளக்க கண்காட்சி வரும் அக்டோபர் 9-ம் திகதி முதல் 11-ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதனைப் பார்வையிட பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கண்காட்சி நடைபெற உள்ள கல்லூரிக்குள் நுழைந்து கட்டிடங்களை பல கோணங்களில் இரண்டு பேர் வீடியோ எடுத்துள்ளனர்.

அவர்கள் மீது சந்தேகப்பட்டு கல்லூரி தரப்பினர் விசாரித்ததில் நாங்கள் இந்த கல்லூரியில் படித்த பழைய மாணவர்கள் என கூறினர்.

ஆனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்ததால் பொலிசுக்கு தகவல் தரப்பட்டது.

பொலிசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜாபர் அலி மற்றும் ரஷிக் அகமது என தெரியவந்தது.

இதில் ஜாபர் அலி, கடந்த 23-ம் திகதி ஓமன் நாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பி வந்துள்ளார். ரஷீக் அகமதை, ஜாபர் அலிதான் கல்லூரியை வீடியோ எடுக்க அழைத்து வந்துள்ளார்.

எதற்காக வீடியோ எடுத்தாய்? யார் உன்னை வீடியோ எடுக்கச் சொன்னது? என பொலிசார் கேட்க, என் கனவில் கடவுள் தோன்றி விண்வெளி விளக்க கண்காட்சி நடைபெறும் இந்தக் கல்லூரியை வீடியோ எடுக்கச் சொன்னார். அதனாலதான் எடுத்தேன் என ஜாபர் அலி சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்தே போனார்கள்.

ஜாபர் அலியின் கனவில் கடவுள் வீடியோ எடுக்கச் சொன்னதால் நானும் வீடியோ எடுக்க உதவியாக வந்தேன் என சொன்னார் ரஷீக் அகமது. அவர்களிடமிருந்த பைக், 2 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட போது சைக்கோத்தனமாக சொன்ன பதிலையே இருவரும் மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். இதன் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைதான நபர்களுக்கு ஏதேனும் இயக்கத்துடன் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்