லிப்ஸ்டிக்கில் ரகசிய கமெரா! பெரும்புள்ளிகளை மயக்கிய அழகிய பெண்கள்.. 4000 வீடியோக்களின் அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் பல பிரபலங்களை பாலியல் தொடர்பில் மிரட்டி சொகுசாக வாழ்ந்த பெண்கள் அவர்களை ரகசியாக வீடியோ எடுக்க கையாண்ட முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் பத்து நாட்களுக்கு முன்னர் நான்கு பெண்கள் மற்றும் ஒரு ஆண் கைது செய்யப்பட்டனர்.

தொழிலபதிபர் ஹர்பஜன் சிங் என்பவர் முன்னர் கொடுத்த புகாரில், ஷிவானி மற்றும் ப்ரீத்தி என்ற இரு பெண்களுடன் நான் உல்லாசமாக இருந்தேன், அதை வீடியோவாக எடுத்து என்னை மிரட்டுகின்றனர்.

பல முறை அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டேன். இப்போது 3 கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என தெரிவித்தார்.

இதையடுத்தே அந்த பெண்கள் உள்ளிட்ட கும்பலை பொலிசார் பொறிவைத்து பிடித்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை பல பெரும்புள்ளிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருக்கும் போது அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து பின்னர் அதை காட்டி அவர்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

இந்நிலையில் அவர்களை எப்படி ரகசியாக வீடியோ எடுத்தோம் என அவர்கள் பொலிசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதாவது லிப்ஸ்டிக், செல்போன்கள் மற்றும் கண்ணாடிகளில் ரகசிய கமெராக்களை அமைத்து இவர்கள் அந்தரங்க காட்சிகளை படம் எடுத்துள்ளனர்.

அறைகளில் கமெரா வைத்தால் உடன் இருக்கும் பெரும் புள்ளிகள் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் இப்படி நூதன முறையை கையாண்டோம் என கைதான பெண்கள் பொலிசாரிடம் கூறியுள்ளனர்.

இது தொடர்பிலான 4000 வீடியோக்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்