வெளிநாட்டில் நிரந்தரமாக தங்கிய கணவன்... ஊருக்கு வந்தபோது மனைவி குறித்து தெரிந்த அதிர்ச்சி உண்மை

Report Print Raju Raju in இந்தியா

வெளிநாட்டில் இருந்த ஊருக்கு வந்த நபர் வீட்டின் மொட்டை மாடியில் சடலமாக கிடந்த வழக்கில் அதிரடி திருப்பமாக அவர் மனைவியே காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தமிழகத்தின் காரைக்குடியை சேர்ந்தவர் மணிமுத்து. இவர் கட்டாரில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, வீட்டு மொட்டை மாடியில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார் மணிமுத்து.

அவர் சடலமாக கிடப்பதை அதிகாலையில் பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி பூமதி பொலிசுக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிய நிலையில் உறவினர்களுடன் ஏற்பட்ட சொத்து தகராறால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கருதினர்.

ஆனால் இந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக பூமதியே கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது, பூமதியின் அழுகை செயற்கையாக இருப்பதை கண்டுபிடித்த பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையிலேயே அனைத்து விடயங்களையும் கூறியுள்ளார்.

பொலிசார் கூறுகையில், சம்பவம் நடந்த நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 2.45 மணிக்குள் பூமதி யாருக்கோ தொடர்ந்து 20 தடவை போனில் பேசியுள்ளார்.

இது குறித்து விசாரித்ததில் பூமதி சாமியார் வேல்முருகன் என்பவருடன் பேசியது தெரியவந்தது.

வேலுமுருகன் 15 ஆண்டுகளுக்கு முன்னர் புதையலை எடுத்து தருவது தொடர்பாக பூமதியை சந்தித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது, இதோடு பூமதியின் கணவர் மணிமுத்து நிரந்தரமாக வெளிநாட்டிலேயே பணிபுரிந்து வந்ததால் எப்போதாவது தான் ஊருக்கு வருவார். இது இவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு வந்த மணிமுத்துவுக்கு மனைவியின் தகாத உறவு குறித்து தெரிந்த நிலையில் அவரை கண்டித்தார்.

பூமதியோ தன்னுடைய காதலனான சாமியாரிடம் கூறி, கணவனின் கை காலை உடைக்க சொல்லியிருக்கின்றார்.

ஆனால், இதுதான் தருணமென அமாவாசை தினத்தில் நடுநிசி 1 மணிக்கு நிர்வாண பூஜையை நடத்திவிட்டு தன்னுடைய கூட்டாளிகளான பிரகாஷ் மற்றும் குமாரை அழைத்து கொண்டு சாமியார் வேல்முருகன் மணிமுத்து வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்த மணிமுத்துவை அனைவரும் கத்தியால் குத்திக் கொன்றிருக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வேல்முருகன், பிரகாஷ், பூமதியை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள குமாரை விரைவில் பிடிப்போம் என கூறியுள்ளனர்.

இதனிடையில் பூமதி அளித்த வாக்குமூலத்தில், என்னால் சாமியாரை விட்டு இருக்க முடியவில்லை. அவருடன் பழகக்கூடாது என என் கணவர் சொன்னதை தாங்கி கொள்ளவும் முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் தான் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம் என கூறி அதிரவைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்