என் குழந்தை அவர் ஜாடையில் இருந்ததால் கணவரிடம் சிக்கிகொள்வேன் என பயந்தேன்... இளம் பெண்ணின் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்தவர் சோலையம்மாள். இவர் கணவர் முருகன் சென்னையில் வேலை செய்து வரும் நிலையில் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான சோலையம்மாளுக்கு கடந்த 14ஆம் திகதி பெண் குழந்தை பிறந்த நிலையில் 16ஆம் திகதி குழந்தையுடன் மாயமானார்.

இது குறித்த பொலிஸ் விசாரணையில் சோலையம்மாள் சென்னைக்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து உறவினர்களுக்கு போன் செய்த அவர் குழந்தை இறந்துவிட்டதாகவும், அதை சென்னையில் அடக்கம் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உறவினர்கள் அவரை பேசி ஊருக்கு வரவழைத்த நிலையில் பொலிசார் சோலையம்மாளிடம் குழந்தை இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் என் கணவரின் அண்ணன் பாபுவுக்கும் நீண்ட நாள்களாக தொடர்பு இருந்தது. கணவர் வேலைக்குப் போகும் சமயத்தில் நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்துக் கொள்வோம்.

எங்கள் நெருக்கத்தால் பிறந்தது தான் இந்த குழந்தை. அப்போது பாபுவின் முக ஜாடையில் குழந்தை இருந்ததால் கணவரிடம் சிக்கி கொள்வேன் என பயமாக இருந்தது.

இதையடுத்து குழந்தையை கொல்ல முடிவெடுத்த நானும் பாபுவும் கழுத்தை நெரித்து குழந்தையை கொன்று ஒரு துணியில் கட்டி சேவூர் வயல்வேலி முள் புதரில் புதைத்துவிட்டோம் என கூறினார்.

இதையடுத்து சோலையம்மாளையும் பாபுவையும் கைது செய்த பொலிசார் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்