முட்புதரில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம்பெண்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் அதிரடி தீர்ப்பு

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதான மூன்று குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சென்னையை அடுத்த சிறுசேரியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி என்ற இளம் பெண் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் திகதி பணிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்தநிலையில், அதே ஆண்டு பிப்ரவரி 22ம் திகதி சிப்காட் வளாகத்தில் உள்ள முட்புதரில் கழுத்து அறுக்கப்பட்டு, அழுகிய நிலையில் உமா மகேஸ்வரியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், உமா மகேஸ்வரி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து அவர்கள் 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தனர். அதை உயர்நீதி மன்றமும் நிராகரித்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்