என் கணவர் ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கவில்லை.. பெண்களை துஷ்பிரயோகம் செய்யவில்லை.. மனைவி கண்ணீர்!

Report Print Kabilan in இந்தியா

சேலத்தில் தன் கணவர் ஓரினச்சேர்க்கை அழைத்ததாக பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டுள்ளதாக, பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதான மோகன்ராஜின் மனைவி புகார் மனு அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மோகன்ராஜ் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் முருகேசன் என்பவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டார்.

அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போனில், பெண் ஒருவரை மோகன்ராஜ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற வீடியோவும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், கல்லூரி மாணவி ஒருவர் உட்பட 7 பெண்களை மோகன்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து முருகேசனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்டிருந்த மோகன்ராஜிடம் பொலிசார் மேலும் விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பில் பெண்கள் யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்று பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தனது கணவர் மோகன்ராஜ் மீது பொலிசார் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக பொய் வழக்கு பதிந்துள்ளதாக, அவரது மனைவி பரிமளா மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

அத்துடன் தொழில் போட்டி காரணமாகவே இவ்வாறு பொய்யான புகார் ஜோடிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், ஏழு பெண்களை தனது கணவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், வைரலாகியிருக்கும் வீடியோவில் இருப்பது தனது கணவர் தான் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து ஆர்.டி.ஓ விசாரணை வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்