கடிதம் எழுதிவைத்துவிட்டு ஆற்றில் குதித்த மாணவி!

Report Print Vijay Amburore in இந்தியா

ஆந்திர மாநிலத்தில் 9ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் குண்ட்லகம்மா நதி பாலம் அருகே நேற்றைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அந்த சமயம் பணிக்கு சென்றுகொண்டிருந்த சுப்ப ராஜு என்கிற பொலிஸார், அருகில் சென்று பார்த்துள்ளார்.

அந்த இடத்தில் தேவி என்கிற 15 வயது சிறுமி ஒருவர் கைப்பட எழுதி வைத்த கடிதம் மற்றும் அவருடைய பை இருந்துள்ளது. அந்த கடிதத்தில், "நீங்கள் என் சிறந்த நண்பர், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்" என எழுதியிருந்தார்.

அதனை கைப்பற்றிய சுப்ப ராஜு, உடனடியாக மற்ற பொலிஸாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், ஆற்றில் இறங்கி மூன்று மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர், மாணவியின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்