கொட்டித் தீர்த்த மழை... நிலை தடுமாறி கவிழ்ந்த பேருந்து: கொத்தாக பலியான 21 பேர், 50 பேர் படுகாயம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று மலைப்பகுதியில் உள்ள சாலையில் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் இன்று மாலை இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொட்டித் தீர்த்த மழையால் 70 பயணிகளுடன் பயணித்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது

இந்த விபத்தில் 21 பேர் சம்பவயிடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்