அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வருவார்.. துப்பட்டாவை வைத்து... திருமணமான பெண்ணின் வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்ட மனைவி பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பவானி. சைக்கிள் கடை நடத்தி வந்த அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

இதையடுத்து மனைவியுடன் அடிக்கடி அவர் போதையில் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மே மாதம் 2ஆம் திகதி சரவணன் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து பொலிசார் அவர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மது குடிக்க பணம் கொடுக்காததால் சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி பவானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சரவணனின் பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்தபோது, அதில் சரவணன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து பொலிசார் பவானியை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கணவரை கொலை செய்ததாக தெரிவித்தார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் வேலாயுதம் (35) என்பவரின் மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். வேலாயுதம் அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து செல்வார். இதனால் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தோம்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான எனது கணவர் அடிக்கடி என்னுடன் தகராறு செய்வார். இதனால் வேலாயுதம் எனது கணவரை கண்டித்தார்.

ஆனால் அதை அவர் பொருட்படுத்தாமல் என்னிடம் சண்டை போட்டு வந்தார்.

எனவே எங்கள் தொடர்புக்கு இடையூறாக இருப்பதால் எனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.

சம்பவத்தன்று சரவணன் அதிக மது போதையில் வீட்டிற்கு வந்தார். நானும், வேலாயுதமும் சேர்ந்து பிளாஸ்டிக் வயர் மூலம் சரவணின் கை கால்களை கட்டி, கழுத்தை நெரித்தும், பிளாஸ்டிக் பைப்பால் அடித்தும் கொலை செய்தோம்.

பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவருடைய உடலை துப்பட்டாவில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடக மாடினோம் என்று தெரிவித்தார்.

இதையடுத்து பவானி மற்றும் வேலாயுதம் ஆகிய இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்