இஸ்ரோ விஞ்ஞானி கொடூர ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை....! அதிர்ச்சி சம்பவம்

Report Print Abisha in இந்தியா

கேரளாவை பூர்வீகமாக கொண்ட இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் ஹைதராபாத் குடியிருப்பில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி சுரேஷ் கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் பணிநிமித்தமாக ஹைதரபாத்தில் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவரது மனைவி சென்னையில் உள்ள வங்கி ஒன்றி பணியாற்றி வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் அமெரிக்காவிலும். மகள் டெல்லியிலும் உள்ளதால் சுரேஷ் தனியாக அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுரேஷ் நேற்று இஸ்ரோவிற்கு பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகின்றது. இதை அடுத்து அவர் மனைவிக்கு அதிகாரிகள் தொடர்பு கொண்டு தகவல் விசாரித்துள்ளனர். அவரது மனைவி உறவினர்களிடம் வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார்.

அங்கு சென்ற உறவினர், சுரேஷ் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின் அவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், அவர் பலமான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார் என்று பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதற்காக நடந்த கொலை, யார் இதை செய்தார் என்பது குறித்து பொலிசார் சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்