சீமான் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய நபர்.... ஓரினைசேர்க்கை, 7பெண்கள் வீடியோ என அடுக்கடுக்கான புகார்.

Report Print Abisha in இந்தியா

நாம்தமிழர் கட்சியின் சேலம் ஆட்டோ தொழிற்சங்க தலைவராக இருந்த மோகன்ராஜ் மீது மேலும், ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

சேலம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ். இவர், ஆண் ஒருவரை ஓரினசேர்க்கைக்கு அழைத்ததாக புகார் எழுந்தது.

பொலிசார் நடத்திய விசாரணையில், மோகன்ராஜ் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக எடுத்துமிரட்டி பணம் பறித்துவந்ததும், பல, பெண்களின் ஆபாச வீடியோக்களும் அவரிடம் இருந்து சிக்கின.

இதனை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் மோகன்ராஜ் குறித்தும் அவர் சார்ந்த கட்சி குறித்தும் கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து 5 தினங்களுக்கு முன்னரே ஆட்டோ மோகன்ராஜை தங்கள் கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆட்டோ மோகன்ராஜின் ஆதரவாளர்கள் சிலர் பாதிக்கப்பட்ட 7 பெண்களின் வீட்டிற்கு சென்று பொலிஸ் விசாரணைக்கு செல்ல வேண்டாம் என கூறி பணம் தருவதாக பேரம் பேசியுள்ளனர்.

பணம் பெற மறுத்தவர்களிடம் பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைத்தால் தங்களிடம் உள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்ட தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் மோகன்ராஜால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது கணவருடன் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்துள்ளார். மோகன்ராஜுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற் கொள்ளும்படி சேலம் காவல் ஆணையர் செந்தில் குமாரை சந்தித்து கண்ணீர் விட்டு முறையிட்டுள்ளார். இதையடுத்து இந்த பலாத்கார வழக்கு மாநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆட்டோ மோகன்ராஜ் மீது பலாத்காரம், அடைத்து வைத்தல் ,கொலை மிரட்டல் விடுத்தல், அடித்து தாக்குதல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் துணிந்து புகார் அளிக்கவும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்