மோடிக்கு பேனர் வைக்க தமிழக அரசு தாக்கல் செய்த மனு... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு: கடுப்பில் பொதுமக்கள்

Report Print Basu in இந்தியா

இந்திப பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை வரவேற்கும் வகையில் பேனர் வைக்க அனுமதி கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி மாமல்லபுரத்தில் இந்தியா - சீனா தலைவர்கள் இருவரின் சந்திப்பு நடைபெறவுள்ளது. இவர்களை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி, அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று மனு மீதான விசாரணையை தொடர்ந்த நீதிமன்றம், டெல்லியில் தொடர்ந்து பல வெளிநாட்டு பிரஜைகள் வருகிறார்கள், அங்கு பேனர் வைக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர்.

மேலும், பேனர் தடை அரசியல் கட்சிகளுக்கு மட்டும் தான் என குறிப்பிட்ட நீதிமன்றம், சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களுக்கு பாதிப்பின்றி, அனுமதிஅளிக்கப்பட்ட இடத்தில் வரவேற்பு பேனர்கள் வைக்க அனுமதி வழங்கியது.

சமீபத்தில் பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கின் போது, மக்கள் விவாகரத்திற்கு தவிர மற்ற அனைத்திற்கும் பேனர் வைப்பதாக அதிப்தி தெரிவித்திருந்த நீதிமன்றமே, இன்று அரசிற்கு பேனர் வைக்க அனுமதி அளித்துள்ளது பொதுமக்களிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்