இஸ்ரோ விஞ்ஞானி கொலை.... சிக்கி கொண்ட நண்பர்: தொடரும் விசாரணை!

Report Print Abisha in இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானி மர்மமான முறையில் இறந்து கிடந்த வழக்கில் அவர் நண்பர் ஒருவர் சிக்கியுள்ளார்.

இஸ்ரோவில், பணியாற்றி வந்த சுரேஷ் இவர், கேரளாவை பூர்வீகமாக கொண்டவராவர்.

இவர் நேற்று காலையில் வீட்டில் தலையில் பலத்த காயத்துடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் இறப்பு கொலை வழக்காக பதிவு செய்து பொலிசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்நிலையில், இந்த வழக்கில் அவரது நண்பர் ஒருவருக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிசார் தரப்பில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுரேஷ்ன் மனைவி அவருக்கு தொடர்பு கொண்டபோது அலைபேசி சுவிட்ஆப் செய்யப்பட்டிருந்தது. அதனால், அவர் உறவினரிடம் வீட்டில் சென்று பார்க்க கூறியுள்ளார்.

அப்படிதான் சுரேஷ்ன் இறப்பு குறித்து பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் அலைப்பேசியில் இறுதியாக பிரபாகர் என்ற ஒருவருக்கு அழைத்து வாஷிங்மெஷின் பற்றி விசாரித்துள்ளார். அதற்கு பின் சுட்ஆப் ஆகியுள்ளது.

சிசிடிவி கேமரா மற்றும் சுரேஷின் போன் தகவல்களைச் சேகரித்து வருகிறோம்.

மேலும், சமீபகாலமாக 27 வயது ஸ்ரீனிவாஸ் என்ற இளைஞர் தினமும் சுரேஷின் வீட்டுக்கு வந்து செல்வதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். சுரேஷும் ஸ்ரீனிவாஸிடம் நிறைய முறை அலைப்பேசியில் பேசியுள்ளார். சுரேஷ் இறந்த அன்றைய தினமும் ஸ்ரீனிவாஸ் கட்டாயம் சுரேஷ் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்