மனைவி மகனை கொலை செய்த நபர்... ஜாமினில் வெளிவந்து செய்த விபரீதம்

Report Print Abisha in இந்தியா

தனது மனைவி மகனை கொலை செய்துவிட்டு சிறை சென்ற நபர், ஜாமினில் வெளிவந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் மாணிக்கவேலூரை சேர்ந்தவர் லொறி ஓட்டுநர் சுரேஷ் இவர் கவுரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த தம்பதிக்கு புகழ்வினை என்ற ஒன்றரை வயது மகன் இருந்த நிலையில், மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 9ம் திகதி மனைவி மற்றும் மகனை அருகே உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, அவரை மீட்ட அப்பகுதியினர், பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்ப இடத்திற்கு வந்த பொலிசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். 3மாதங்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமினில் வெளிவந்துள்ளார்.

பின், மனைவி மற்றும் மகனை கொலை செய்த தோட்டத்திற்கு சென்று, அங்கு தன்னுடலில் மின்சாரத்தை பாய்ச்சி உயிரை மாய்த்து கொள்ள முற்பட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார்.

மனைவி, மகனை கொன்ற விரக்தியில் சுரேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணம் உள்ளதா என்று பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்