தந்தைக்கு துயரம் நடந்த அதே இடத்தில் பரிதாபமாக பலியான மனைவி, குழந்தை: கதறி துடிக்கும் கணவன்!

Report Print Vijay Amburore in இந்தியா

தந்தைக்கு விபத்து நடந்த அதே இடத்திலே மனைவி, மகளை லொறி விபத்தில் பறிகொடுத்த தந்தை கதறி அழுது வருகிறார்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயக்குமார் (37) மின் வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி சித்ராவும் இதே துறையில் வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு யஷ்வந்த் என்ற 9 வயது மகனும், இன்சிகா என்ற 7 வயது மகளும் உள்ளனர்.

சித்ரா தினமும் தன்னுடைய மகனை முதலில் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதன்பிறகு மகளை பள்ளி வேனில் ஏற்றிவிடுவார்.

அதேபோன்று இன்று காலை மகனை முதலில் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, மகளை பள்ளி வேனில் ஏற்றிவிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளார். அப்போது வேகமாக வந்த லொறி இருவரின் மீது ஏறி இறங்கியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே உடன் நசுங்கி பலியாகினர். இதே இடத்தில் கடந்த வாரம் நடந்த விபத்தில் ஜெயக்குமாரின் தந்தை படுக்கையாமடைந்து மருத்துவனையில் கவலைக்கிடமாக இருந்து வருகிறார்.

அவரை அருமையை இருந்து கவனித்து வந்த ஜெயக்குமார், இன்று தன்னுடைய மனைவி, மகள் பலியானதை கேள்விப்பட்டு கதறி துடித்துள்ளார்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்