ஒரே குடும்பத்தில் 6 பேர் கொலையில் சைனேடு தந்து உதவியவர்: சிக்கிய மேலும் இரண்டுபேர்... விலகும் மர்மங்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் சொத்துக்காக தனது கணவர் குடும்பத்தினரை விஷம் வைத்து கொன்ற சம்பவத்தில், மேலும் இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் தாமரசேரி பகுதியை சேர்ந்த 47 வயது ஜோளி, சொந்துக்காக தனது கணவர் குடும்பத்தினர் 6 பேரை விஷம் வைத்து கொன்றதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஜோளி அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது. அதில் அவர் கொலைக்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.

தமது மாமியார் அன்னம்மா வீட்டின் அனைத்து பொறுப்புகளையும் கவனித்து வந்துள்ளார். ஜோளி வீட்டில் இருந்ததால் அவருக்கு எந்த வருமானமும் இல்லை.

இதனால் ஜோளிக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. வீட்டில் அனைத்து அதிகாரங்களும் அன்னம்மாவிடம் இருந்தது

இதன்காரணமாக அன்னம்மாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்த அவர் மட்டன் சூப்பில் விஷம் கலந்து அன்னம்மாவுக்கு அளித்துள்ளார்.

அன்னம்மாவின் கணவர் டாம் தாமஸ் தனது விவசாய நிலத்தை விற்று அதில் வந்த பணத்தை ஜோளியிடம் கொடுத்துவிட்டு இதற்கு மேல் எந்த பங்கும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த ஜோளி, தனது மாமனார் டாம் தாமஸை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

வீட்டில் கிழங்கு சாப்பிட்ட தாமஸ் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். அப்போதும் வீட்டில் ஜோலி மட்டும் இருந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.

இதனிடையே ஜோளியின் நட்பு வட்டம் அவரது கணவர் ராய் தாமஸுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து ராய் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இது ஜோளியின் சுதந்திரத்தை பறிப்பது போன்று இருந்துள்ளது. அந்த வீட்டில் ராய் தாமஸ், ஜோளி மற்றும் அவரது மகள் மூவர் மட்டுமே வசித்து வந்துள்ளனர்.

சாப்பிட்டு முடித்துவிட்டு கழிவறை சென்றவர் அங்கே வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். கழிவறை கதவுகள் மூடி இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக்கொண்டு அவரை வெளியில் மீட்டனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார்.

ஜோலி முதலில் தனது கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறினார். மருத்துவ அறிக்கையில் உடலில் விஷம் கலந்து இருந்தது தெரியவந்தது.

இதேப் போன்றே எஞ்சிய மூன்று கொலைகளையும் ஜோளி திட்டமிட்டு செய்து முடித்துள்ளார். மட்டுமின்றி, உறவினரான சாஜுவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அவரது மனைவி சிலியை விஷம் வைத்து கொன்றதும் வாக்குமூலத்தில் ஜோளி தெரிவித்துள்ளார்.

மொத்த சொத்துக்கும் வாரிசாக சிலியின் 2 வயது மகன் ஆல்பைன் இருப்பதால் அந்த பிஞ்சு குழந்தையையும் ஜோளி விஷம் வைத்து கொன்றுள்ளார்.

மூன்று நாட்கள் கோமாவில் இருந்த குழந்தை ஆல்பைன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளது.

தற்போது இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், கணவர் உட்பட 6 பேருக்கு விஷம் வைத்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இத்தனை கொலைகளையும் ஜோலி தனியாக செய்திருக்க வாய்ப்பில்லை என பொலிசார் கண்டறிந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரித்ததில் ஜோலிக்கு உதவிய நகைக்கடையில் பணியாற்றும் மேத்தீவ் மற்றும் பிராஜி குமார் இருவரும் இந்த கொலைகளுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இவர்கள் தான் தங்கத்தை பிரித்தெடுக்கும் சயனைடை ஜோலிக்கு கொடுத்துள்ளனர். இதனை உணவில் கலந்து கொடுத்து தான் இத்தனை கொலைகளையும் செய்ததாக காவல்துறையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது. நல்ல வேளையாக அவர் கைது செய்யப்பட்டுவிட்டார். இன்னும் அவர் எத்தனை கொலைகளை செய்யத் திட்டமிட்டிருந்தார் என்பது விசாரணையில் தான் தெரியவரும். கணவர் உட்பட 5 பேருக்கு விஷம் கொடுத்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளார் என அதிர்ச்சியுடன் தெரிவித்தனர். ஜோலி மற்றும் 2 பேரை தாமரசேரி முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் 2 வாரங்களுக்கு விசாரணைக்கு உட்படுத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்