பிரபல நகைச்சுவை நடிகர் படப்பிடிப்பின் போது மரணம்... சோகத்தில் திரையுலகம்

Report Print Basu in இந்தியா

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகரான கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார்.

வடிவேலு குழுவில் இருந்த நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றிய பின் நடிகரானார்.

தவசி படத்தில் வடிவேலுவிடம் ஓசாமா பின்லேடனின் அட்ரஸை கேட்கும் நசைச்சுவை மூலம் பிரபல மடைந்த கிருஷ்ணமூர்த்தி, பாலாவின் நான் கடவுள் படம் உட்பட பல படங்களில் முக்கிய கதாபத்திரத்திலும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 4:30 மணிக்கு குமுளியில் படப்பிடிப்பின் போது அவர் மரணமடைந்துள்ளார்.

அவரது இழப்பால் வருத்தத்தில் உள்ள திரையுலகினர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்