திடீரென இடிந்து விழுந்த பாலம்.. ஆற்றில் கவிழ்ந்த கார்கள்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்ததில், ஏராளமான கார்கள் சிக்கின.

குஜராத்தின் ஜுனாகத் அருகில் உள்ள மலனாகா கிராமத்தின் வழியே, ஆற்றை கடக்க பாலம் ஒன்று உள்ளது. இதில் எப்போதும் கார் உட்பட வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இதனால் இந்த பாலம் பரபரப்பாக காணப்படும்.

இந்நிலையில், நேற்றைய தினம் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார்கள், தடுமாறி இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டன.

ஆற்று நீரில் அந்த கார்கள் கவிழ்ந்தன. இதனால் காரில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். பல கார்கள் இந்த விபத்தில் சேதமடைந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் கடுமையான மழை காரணமாக இந்த பாலம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தினால் ஜுனாகத்தில் இருந்து முண்ட்ரா செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்