13நாட்களில் 19பேர் பலி...... புது பெண் உள்பட செல்பியால் நிகழ்ந்த சோக சம்பவம்!

Report Print Abisha in இந்தியா

13 நாட்களில், 19பேர் கிருஷ்ணகிரியில் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி பாம்பாற்றின் அழகை காண பலர் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், புதிதாக திருமணமான பிரபு மற்றும் நிவேதா தம்பத்தினர் வந்துள்ளனர். அவர்களுடன் நிவேதாவின் உறவினர்களான கனிதா, சினேகா, சந்தோஷ், மற்றும் யுவராணி ஆகியோரும் ஆற்றின் அழகில் மயங்கி செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிவேதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் தவறி விழுந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டபடி யுவராணியை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதை கண்டு பிரபுவும், யுவராணியும் கதறி அழுதவாறு கூச்சலிட்டார்கள். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து ஊத்தங்கரை பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்டுள்ளனர்.

அணையில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் ஊத்தங்கரை ஒட்டப்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 19 பேர் நீரில் மூழ்கி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்