வீட்டிற்கு வெளியே கேட்ட அலறல் சத்தம்... கொடூரமாக கொல்லப்பட்ட 6 பேர்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் பா.ஜ.க மூத்த தலைவர் மற்றும் அவரின் உறவினர்கள் 5 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஜல்காவ் நகரில் பூஷவால் பகுதியில் ரவீந்திரா காரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பா.ஜ.க. உள்ளூர் தலைவர் ஆவார்.

இந்நிலையில் நேற்று இரவு இவர் வீட்டை விட்டு வெளியே வந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிகளால் சுட்டனர்.

இதனால் இவரின் அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் வெளியே வந்த போது, அவர்களையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.

இருப்பினும் ஆத்திரம் தீராமல் அந்த கும்பல்,அவர்கள் மீது ஆயுதங்களால் கொடூர முறையில் தாக்குதல் நடத்தி அனைவரையும் கொன்று விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர்.

இது குறித்த தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பா.ஜ.க. உள்ளூர் தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்பட 5 பேர் மர்ம நபர்களால் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்