வெளிநாட்டு கண்காட்சியில் இடம் பிடித்த இந்திய பழங்குடி மூதாட்டியின் ஓவியங்கள்!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 80 வயது பழங்குடியின மூதாட்டி வரைந்த ஓவியங்கள் இத்தாலி ஓவியக்கண்காட்சியில் இடம் பிடித்துள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம், லோர்கா கிராமத்தைச் சேர்ந்தவர் தற்போது 80 வயதாகும் ஜோத்கையா பாய் பைகா.

இவர் கடந்த 40 வருடங்களாக ஓவியங்களை வரைந்து வருகிறார். தன்னுடைய 40வது வயதில் கணவனை இழந்த ஜோத்கையா, தன் சோகங்களுக்கு ஓவியம் மூலம் ஆறுதல் தேடியுள்ளார்.

மலைகளிலும், கிராமங்களிலும் தான் பார்க்கும் விலங்குகள், காட்சிகள் என அனைத்தையும் வண்ணம் குழைத்து ஓவியமாய் தீட்டியுள்ளார்.

தற்போது அவரது ஓவியங்கள் இத்தாலியில் நடைபெற்று வரும் ஓவியக் கண்காட்சியில் இடம்பிடித்துள்ளன.

இது குறித்து பேசிய அவர், நான் பார்க்கும் விலங்குகளை ஓவியங்களாய் வரைகிறேன். ஓவியத்துக்காக நான் இந்தியாவில் சில இடங்களுக்கும் பயணம் செய்துள்ளேன்.

எனக்கு ஓவியத்தை தவிர எதுவுமே செய்ய தெரியவில்லை. 40 வயதில் என் கணவரை இழந்தேன். அதற்குப் பின் என் கவனத்தை ஓவியம் பக்கம் திருப்பிவிட்டேன்.

ஓவியம் தான் என்னை வாழவைத்தது. எனது ஓவியங்கள் உலகளவில் சென்றது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers