6 பேர் கொலையில் திடீர் திருப்பம்.... இரண்டாவது கணவரின் பங்கு அம்பலம்: வெளியான ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய மாநிலம் கேரளாவை உலுக்கிய 6 பேர் கொலை வழக்கில் கைதாள பெண்ணின் இரண்டாவது கணவரும் தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் ஜோளியால் கொல்லப்பட்ட முதல் கணவர் ராய் தாமஸின் சகோதரி ரெஞ்சி தாமஸ் பொலிசாரின் நடவடிக்கையை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஜோளியின் இரண்டாவது கணவர் ஷாஜுவுக்கு எதிராக மேலும் ஆதாரங்கள் வெளிவரும் எனவும், ஜோளி கைதான அன்று ஷாஜு திரைப்படம் பார்க்க சென்றதில் உள்நோக்கம் இருப்பதாகவும் ரெஞ்சி தாமஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பொலிஸ் காவலில் உள்ள ஷாஜு கண்ணீர் விட்டு கதறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொலைகளில் தமது இரண்டாவது மனைவியான ஜோளிக்கு தாம் ஆதரவாக செயல்பட்டுள்ளதை ஷாஜு ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி இதுவரை ஜோளி மேற்கொண்ட அனைத்து கொலை தொடர்பிலும் தமக்கு தகவல் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது மனைவி சிலி மற்றும் குழந்தையை கொலை செய்ய தேவையான உதவிகளை தாம் செய்துள்ளதாகவும் ஷாஜு ஒப்புக்கொண்டுள்ளார்.

மனைவி மீதிருந்த பயமே இந்த தகவல்களை வெளியே சொல்ல தாம் தயங்கியதாக அவர் பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த கொலைகளில் சந்தேகம் எழுப்பிய மேத்யூ என்பவரை ஜோளி கொலை செய்துள்ளதை சுட்டிக்காட்டிய ஷாஜு, அதே நிலை தமக்கு ஏற்படும் என அஞ்சியதாக அவர் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஜோளியுடன் பல் மருத்துவமனைக்கு சென்ற சிலி, மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.

இந்த இரு கொலைகளிலும் ஷாஜுவின் பங்கு தெரியவந்த நிலையில், எஞ்சியுள்ள 4 கொலைகளில் ஷாஜுவின் பங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்