தேநீரில் விஷம்... தூங்கி எழுந்த பிள்ளைகளுக்கு அளித்த தாயார்: வெளிச்சத்துக்கு வந்த பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் மூன்று பெண் பிள்ளைகளுக்கும் விஷம் தந்து தற்கொலைக்கு முயன்ற தாயார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

தேனி மாவட்டம் போடியில் கணவரின் மறைவுக்கு பின்னர் தமது மூன்று பெண் பிள்ளைகளை வளர்க்க கடுமையாக போராடி வந்துள்ளார் லட்சுமி.

இவருக்கு ஆதரவாக இருந்த அண்ணன் அவ்வப்போது பண உதவி செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்த லட்சுமி கடந்த 3 ஆம் திகதி காலையில் தூக்கத்தில் இருந்த தமது மகள்களான அனுசியா(19), ஐஸ்வர்யா(16) மற்றும் அக்க்ஷயா(7) ஆகியோரை எழுப்பி தேநீர் குடிக்கக் கொடுத்துள்ளார்.

அதில் ஒருபகுதியை தாமும் குடித்துள்ளார். இதனையடுத்து தாயார் உள்ளிட்ட நான்கு பேருமே வாயில் நுரை தள்ளி கீழே விழுந்து கிடந்தனர்.

அதைக்கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் உடனடியாக லட்சுமியையும், மூன்று பிள்ளைகளையும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

லட்சுமி அந்த தேநீரில் விஷம் கலந்துள்ளது பின்னர் தெரியவந்தது. இதில் சிகிச்சை பலனின்றி அனுசியாவும், ஐஸ்வர்யாவும் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.

லட்சுமி மற்றும் அக்ஷையா உடல்நிலை மோசமடைந்து வருதைக்கண்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர் சிகிச்சையில் இருந்த லட்சுமியின் உடல்நலத்தில் எந்த ஒரு முன்னேற்றம் ஏற்படாதிருந்த நிலையில் திடீரென லட்சுமியும் மரணமடைந்துள்ளார்.

ஒரே குடும்பத்தில் வறுமையின் காரணமாக தாய் உள்பட இரண்டு மகள்கள் இறந்த சம்பவத்தால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்