தமிழன் அபிநந்தனின் படைப்பிரிவுக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம்!

Report Print Kabilan in இந்தியா

இந்திய விமானப்படையில் அபிநந்தன் படைப்பிரிவு உள்ளிட்ட 2 படைப்பிரிவுகளுக்கு, விமானப்படை தளபதி பாராட்டுச் சான்று வழங்கினார்.

தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் பாலக்கோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தினார்.

அப்போது பாகிஸ்தானின் ‘எப்-16’ போர் விமானம் ஒன்றை அவர் சுட்டு வீழ்த்தினார். கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், அபிநந்தனின் 51வது படைப்பிரிவு மற்றும் 9வது படைப்பிரிவுகள் ஈடுபட்டன.

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில், இந்திய விமானப்படை தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவில் கண்கவர் அணிவகுப்பு மரியாதை, விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அபிநந்தனின் படைப்பிரிவு உட்பட இரண்டு படைப்பிரிவுகளுக்கு, வீர தீரச்செயலுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விமானப்படை தளபதி பதாரியா பாராட்டு சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.

Sandeep Saxena

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்