திருமணமான சில மாதத்தில் மாயமான கணவன்! மறுமணம் செய்த மனைவி.. 8 ஆண்டுக்கு பின்னர் அதிரடி திருப்பம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் எட்டு வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன நபர் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி தான் கொலையாளி என்றும் தெரியவந்துள்ளது.

புது டெல்லியை சேர்ந்தவர் ஜெய் பகவான். இவர் மகன் ரவிக்கு 2011-ல் சகுந்தலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

திருமணமான சில மாதங்களில் ரவியை காணவில்லை என அவர் தந்தை ஜெய் பகவான் அப்போது பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசாரின் விசாரணையில் இந்த தகவலும் கிடைக்காததால் வேதனையடைந்த ஜெய் பகவான் உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில் இந்த வழக்கை குற்றப்பிரிவு பொலிசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதன் பின்னர் விசாரணை சூடு பிடித்த நிலையில் ரவி காணாமல் போனதும் அவர் மனைவி சகுந்தலா வேறு திருமணம் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சகுந்தலா மற்றும் அவர் கணவர் கமலிடம் விசாரணை நடத்தப்பட்டும் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இதனிடையில் சகுந்தலாவின் விருப்பத்தை மீறி அவர் ரவிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது பொலிசாருக்கு தெரிந்தது.

மேலும் திருமணத்துக்கு முன்னர் கமல் என்பவரை சகுந்தலா காதலித்து வந்துள்ளார்.

திருமணமான ஒரு வாரத்தில் சகோதரி வீட்டுக்கு செல்ல வேண்டும் என ரவியை சகுந்தலா அழைத்து சென்ற நிலையிலேயே அவர் மாயமானார்.

இதன்பின்னர் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் சகுந்தலா, அவரது காதலன் கமல் மற்றும் நண்பர் ஒருவர் மூவரும் ரவியைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

பொலிசார் கூறுகையில், 2012-ம் ஆண்டு, சகுந்தலா வேறொருவரை மணந்தார். சகுந்தலா, அவரது இரண்டாம் கணவர் கமல் ஆகியோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தச் சோதனையில் மூவரும் சிக்கவில்லை.

ஆனால் பின்னர் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் கமல் சிக்கி கொண்டார், ஆனால் மாட்டி கொள்வதை தவிர்க்க அவர் தலைமறைவானார்.

இந்நிலையில் கடந்த 27ஆம் திகதி கமலை கைது செய்த போது திடுக்கிடும் தகவலை அவர் தெரிவித்தார்.

அதாவது ரவியை கொலை செய்தால் கமலுடன் சேர்ந்து வாழ முடியும் என சகுந்தலா நினைத்தார்.

அதன்படி சகோதரி வீட்டுக்கு செல்ல வேண்டும் என கூறிய சகுந்தலா ரவியுடன் கமலையும் காரில் அழைத்து சென்றார்.

அப்போது கமல், தான் வைத்திருந்த கயிற்றால் ரவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

கமலின் கார் ஓட்டுநர் கணேஷ் இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ 70,000 பணம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ரவியின் உடல் அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைக்கப்பட்டது. தற்போது ரவியின் சடலத்தின் எலும்புகளை துண்டு துண்டாக கைப்பற்றியுள்ளோம்.

கமல் மற்றும் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கர்ப்பமாக இருக்கும் சகுந்தலாவை தேடி வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்