சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்! துண்டிக்கப்பட்ட பாதி உடல்... கண்ணீர் புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் கப்பலில் அடிப்பட்டு பாதி உடல் துண்டிக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை மீட்க மீனவர்கள் போராடினார்கள்.

சென்னை எண்ணூரில் இறந்த நிலையில் ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. கப்பலில் அடிப்பட்டு பாதி உடல் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் அதனை மீட்க முடியாமல் அவதியுற்றனர்.

கிரேன் மூலம் கட்டி இழுக்க முயன்றதால் அதன் உடல் சிதைவடைந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கடலில் மிதந்த திமிங்கலத்தின் உடலில் கயிறு கட்டி ஜேசிபி வாகனம் மூலம் கரைக்கு இழுத்தனர்.

அதன் பிறகு கடற்கரையில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு திமிங்கலத்தின் உடல் புதைக்கப்பட்டது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்