கணவனை தீர்த்துக்கட்ட காதலனை ஏவிய பெண்? விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் வாடகை டாக்ஸி சாரதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அவரது மனைவி மற்றும் காதலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் பெங்களூர் நகரின் ஜிகானி பகுதியில் மனைவியுடன் குடியிருந்து வந்தவர் 36 வயதான வாடகை டாக்ஸி சாரதி ரமேஷ்.

இவரே நேற்றிரவு தனது குடியிருப்பு அருகே மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன் இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முனியப்பா(37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கொல்லப்பட்ட ரமேஷின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷின் மனைவி கலாவதி முனியப்பாவுடன் வீட்டை விட்டு சென்று தனியாக வாழ்ந்துள்ளார்.

கலாவதிக்கும் முனியப்பாவிற்கும் இடையே திருமணத்தை தாண்டிய தகாத உறவு இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரமேஷ் உள்ளூர் காவல்துறையில் அளித்த புகாரை அடுத்து மனைவி கலாவதி மீண்டும் ரமேஷ் உடன் வந்து வாழ்ந்துள்ளார்.

இருப்பினும் இந்தச் சம்பவத்திற்கு பிறகு முனியப்பாவின் வீட்டில் தசாரா விழா நடைபெற்ற போது ரமேஷ் அங்கு சென்று முனியப்பாவை அவரது உறவினர்கள் முன் திட்டி அவமான படுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ரமேஷை கொலை செய்ய முனியப்பா திட்டுமிட்டுள்ளார். நேற்று இரவு ரமேஷ் தனது வீட்டிற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது முனியப்பா அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

மேலும் இச்சம்பவத்திற்கு ரமேஷின் மனைவி கலாவதி உடந்தையா என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்