பெருமைக்காக தான் வெளியிட்ட வீடியோவால் மாட்டி கொண்ட சாமியார் நித்தியானந்தா

Report Print Raju Raju in இந்தியா
993Shares

பிரபல சாமியார் நித்தியானந்தா யூடியூப்பில் வெளியிட்ட வீடியோ காரணமாக அவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் உள்ள சிவன் கோவிலின் மூல லிங்கம் தற்போது தன்னிடம் இருப்பதாகவும், அந்த கோவிலை கடந்த பிறவியில் தான் கட்டியதாகவும் சாமியார் நித்யானந்தா வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து கொளத்தூரை அடுத்த பாலவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (26) என்பவர் கடந்த மாதம் 28ம் திகதி கொளத்தூர் பொலிசில் புகார் கொடுத்தார்.

அதில், மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியான பண்ணவாடியில் இருந்த சிவன் கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு பாலவாடி கிராமத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவிலாக உள்ளது.

எனவே இந்த கோவிலுக்கு சொந்தமான மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக சாமியார் நித்யானந்தா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து அந்த மூல லிங்கத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது புகாரின் பேரில் நேற்று நித்யானந்தா மீது கொளத்தூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக நித்தியானந்தா மீது கைது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்