தந்தை இறந்த 14 நாட்களில் தாய்க்கு மகனால் நேர்ந்த கதி! வீட்டுக்குள் வந்தவர்கள் கண்ட காட்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தந்தை இறந்த 14 நாட்களுக்கு பின்னர் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் சரஸ்வதி (72). இவருடைய கணவர் பாலகிருஷ்ணன் (78). கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது மகன் எத்திராஜ் என்ற ரமேஷ்(42) என்பவருடன் வசித்து வந்தார்.

எத்திராஜ், மனநிலை பாதிக் கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி, எத்திராஜை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டார்.

தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய் சரஸ்வதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மனம் உடைந்த எத்திராஜ், நாம் வாழ வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தாயிடம் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை எத்திராஜ், சரஸ்வதியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். இதில் அவர், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சடலமானார்.

பின்னர் எத்திராஜ் தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார்.

ஆனால் கத்தி, வயிற்றிலேயே மாட்டிக்கொண்டதால் வலியால் அலறி துடித்தார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் சரஸ்வதி சடலமாக கிடப்பதையும், வயிற்றில் கத்தி பாய்ந்த நிலையில் எத்திராஜ் அலறி துடிப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் எத்திராஜை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலையான சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்