மீண்டும் கேரளாவில் பயங்கரம்! நள்ளிரவில் எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண்

Report Print Fathima Fathima in இந்தியா

கேரளாவில் இளம்பெண் ஒருவரை ஒருதலை பட்சமாய் காதலித்த இளைஞன் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் நிதின், இவர் காக்கநாடு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

தன்னுடைய காதலை பலமுறை கூறியும் அப்பெண் நிராகரித்ததாக தெரிகிறது.

இதனால் கடும் கோபத்தில் இருந்த நிதின் அப்பெண்ணை கொலை செய்ய முடிவெடுத்தார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று நள்ளிரவில் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிதின், வெளியே வருமாறு கூறியுள்ளார்.

நடக்கப்போகும் விபரீதம் பற்றி அறியாமல் வெளியே வந்த இளம்பெண்ணின் மீது மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

அத்துடன் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்ததும் அலறித்துடித்துக் கொண்டு காப்பாற்ற சென்ற பெண்ணின் தந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers