அறை முழுவதும் ரத்தம்... வெவ்வேறு இடங்களில் சடலமாக கிடந்த இளம்காதல் ஜோடி!

Report Print Vijay Amburore in இந்தியா
319Shares

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறையில் இளம்காதல் ஜோடி ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த சாகர் பாபு (25) மற்றும் அவருடைய காதலி தேஜஸ்வி (23), கடந்த புதன்கிழமை காலை தெனாலி ரயில்வே நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

மாலை நேரமாகியும் அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கதவை திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்த போது, கையில் ரத்தம் வழிந்தோடியபடியே தேஜஸ்வி இறந்து கிடந்துள்ளார்.

அதே போல குளியறையில் சாகர் பாபு இறந்து கிடந்துள்ளார். இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், அறையில் இருந்து பூச்சி மருந்தை கைப்பற்றினர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், 7ம் திகதியிலிருந்து தேஜஸ்வி மாயமாகியிருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்