ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி... 4 பேர் பரிதாப பலி!

Report Print Vijay Amburore in இந்தியா
468Shares

சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (68). இவரது மனைவி சுப்பம்மாள்(60). இவர்களுக்கு நாகராஜ்(35), ரவி(30) என்கிற இரண்டு மகன்களும், கல்யாணி (28) என்கிற மகளும் உள்ளனர்.

கல்யாணிக்கு திருமணம் முடிந்து சர்வேஷ்வரி (8), யோகேஷ்வரி (6) என இரு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடன் பிரச்னை காரணமாக குடும்பத்தை சேர்ந்த 7 பேருமே பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதில் கோவிந்தசாமி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கல்யாணி மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்