சீமானுக்கு திடீரென்று குவியும் ஆதரவு.... நேருக்கு நேர் விவாதிக்க தயார் என காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு

Report Print Santhan in இந்தியா

சீமானுடன் நேருக்கு நேராக நான் விவாதிக்க தயார் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ்காந்தியை கொலை செய்து தமிழர் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து கேட்கப்பட்டதற்கு நான் அப்படி தான் சொன்னேன், கூறியதை வாபஸ் வாங்கமாட்டேன் என்று கூறினார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் சீமானுக்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. அதில் #WeSupportSeeman என்ற ஹாஷ்டெக் இந்திய அளவில் 3-வது இடத்தில் டிரண்டாகி வருகிறது.

மேலும் சீமானுடன் நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்