மாமல்லபுரத்தில் குவிந்த பல நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள்! ஒரே நாளில் வசூலான பணம் எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா
156Shares

மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வந்து சென்ற பிறகு அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில் ஒரே நாளில் ரூ.7 லட்சம் நுழைவு கட்டணம் வசூல் ஆகியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வந்து சென்ற பிறகு பல்வேறு இடங்களில் இருந்து வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இங்கு கடற்கரை கோவில், ஐந்துரதம் ஆகிய 2 புராதன சின்னங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிக்கு ரூ.600-ம் நுழைவு கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது.

குறிப்பாக காணும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, கோடை விடுமுறை உள்ளிட்ட விஷேச தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் பார்வையாளர் கட்டணம் அதிகம் வசூலாவது வழக்கம். தற்போது இரு நாட்டு தலைவர்கள் வந்த சென்ற பின்னர் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

குறிப்பாக கடந்த ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்தில் லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அன்று ஒரே நாளில் பார்வையாளர் நுழைவு கட்டணம் மூலம் ரூ.7 லட்சம் வசூலாகி உள்ளது.

இந்த தகவலை தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்