அம்மாவும் 40 திருடர்களும்..! அதிமுக-வை சீண்டி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சீமான்

Report Print Basu in இந்தியா
116Shares

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதிமுக அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

முன்னதாக, விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரசாரம் செய்தபோது சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சீமானின் இந்த பேச்சு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சீமான் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக நாம் தமிழர் கட்சியின் சீமான் வருகை தந்தார்.

அப்போது பேசிய சீமான், அலிபாபாவும் 40 திருடர்கள் போல், அம்மாவும் 40 திருடர்கள் உள்ளனர். என்ன இப்போது அம்மா இல்லை, திருடர்கள் தான் உள்ளதாக தூத்துக்குடியில் சீமான் சர்ச்சையாக பேட்டியளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்