ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சீமானின் கோபம் சரிதான்.. ஆனால்- திருமாவளவன்!

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து சீமான் கூறிய கோபம் சரிதான் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்து தமிழர் நிலத்தில் கொன்று புதைத்தோம்’ என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன் பின்னர், தான் கூறியதை திரும்பப் பெற மாட்டேன் என்று சீமான் தெரிவித்தார்.

அவரது கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள் குவிந்து வந்தாலும், எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ஆதரவினை சீமானுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘ராஜீவ் கொலை வழக்கில் சீமானின் கோபம் சரிதான். ஆனால், விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்தை எச்சரிக்கையுடன் தெரிவிக்க வேண்டும். ராஜீவ் காந்தியை கொன்றதாக விடுதலை புலிகள் எந்த இடத்திலும் கூறவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்