ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொன்ற கேரள பெண்.. வீட்டில் ஒரு பொருளை ஒளித்து வைத்திருப்பதாக அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவை உலுக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் கொலை வழக்கில் கைதான ஜோலி தனது வீட்டில் ஒரு பொருளை ஒளித்து வைத்திருப்பதாக கூறி பொலிசாரை அதிரவைத்துள்ளார்.

கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை கிராமத்தை சேர்ந்த ஜோலி (47) என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளில் தன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொலை செய்துள்ளார்.

சொத்துக்காக கொலை என்றாலும், பெண்களை கண்டாலே ஜோலிக்கு பிடிக்காதாம். அதனால் கொலை செய்த 6 பேரில் 3 பேர் மாமியார் உட்பட பெண்களாக இருந்திருக்கிறார்கள்.

குடும்பத்தினருக்கு காபி, சூப்பில் சயனைடு விஷத்தை கொடுத்தே ஜோலி அவர்களை கொன்றிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஜோலியிடம் நடத்தப்படும் விசாரணையில் புதுபுது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஐந்தாம் நாள் நடந்த விசாரணையின் போது தனது வீட்டில் முக்கியமான ஒரு பொருளை மறைத்து வைத்துள்ளேன் என கூறி பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்தார் ஜோலி.

அது என்ன பொருள் என பொலிசார் கேட்டதற்கு, அது ஒன்றுமில்லை, ஆறு பேரை கொன்றதையடுத்து பொலிசில் சிக்கினால் நானும் அதே சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்யலாம் என முடிவு செய்து எனக்குகொரு பாட்டில் சயனைடை வாங்கி வீட்டில் ஒளித்து வைத்துள்ளேன் என கூறினார்.

இதையடுத்து, பொலிசார் ஜோலி சொன்ன வீட்டுக்கு இரவோடு இரவாக அவரை அழைத்து கொண்டு சென்ற நிலையில் சமையலறையில் சின்ன போத்தலில் சயனைடு இருந்ததை கண்டு பிடித்தனர். அந்த போத்தல் ஒரு துணியை போர்த்தி மூடப்பட்டு இருந்தது.

இதை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்